டெனட் ட்ரைலர் ரிலீஸ்

டெனட் ட்ரைலர் ரிலீஸ்

Share it if you like it

ஹாலிவுட்டின் பிரபலமான இயக்குனரான கிறிஸ்டோபர் நோலனின் அடுத்த படைப்பான டெனட் ட்ரைலர் வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவரின் நான் லீனியர் படங்களை கொண்டாடதவர்களே இல்லை. இவரின் மொமெண்ட்டோ திரைப்படத்தை தான் முருகதாஸ் கஜினி என்ற பெயரில் தமிழில் எடுத்ததாக ஒரு பேச்சு உள்ளது.

இவரின் திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு கதையும் ஒரு பின்கதையும் கொடுத்து, அந்த பாத்திரத்தின் பார்வையில் கதை சொல்லும் அவரின் பாணியே மற்ற இயக்குநர்களிடமிருந்து அவரை தனித்து காட்டுகின்றது. இந்நிலையில் அவரின் அடுத்த படைப்பிற்கு உலகமே எதிர்நோக்கிருந்த நிலையில். அவரின் டெனட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி யூடூப் மற்றும் சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


Share it if you like it